நான் அவளின் கைகளை பிடுத்து ஒன்றும் இல்லை, அவரிடம் சிறிது குழப்பங்களை தீர்த்து கொள்ள சென்றேன், இப்போ எனக்கு ஒரு விதமாக மனம் நிம்மதியா இருக்கு என்று சொல்லி அவளின் கண்ணங்களை தடவினேன். அவளும் என்னை பார்த்து சரி என்று சொல்லி எனது தோளில் சாய்ந்து கொண்டால். எனது மகனோ டிவி பார்த்துக்கொண்டு பசிக்குது என்று சொல்லி குரல் கொடுத்தான். நானும் எனது மனைவியும் வெளியில் சென்று மூவரும் உணவருந்தினோம். மாலை நான்கு மணிக்கு என் மனைவி இப்போ கொஞ்சம் மேக்கப் ட்ரை பண்ணுவோமா என்று என்னை பார்த்து தயக்கத்தோடு கேட்டால். நான் இப்போ பண்ண வேண்டுமா, நாளைக்கு பார்ப்போமே என்று கேட்டதற்கு, அவள் இல்லை இது தினம் பழக வேண்டும் இல்லை என்றால் சரியான பழக்கம் விட்டுவிடும் என்றால். சிறிது நேரம் அவளது ஆசிரியை சொன்னதை நினைத்து பார்த்து அவளிடம் சரி என்று கூறி மற்றொரு அறைக்கு சென்றோம். செல்லும் முன் எனது பையனை விளையாடிகொண்டிருக்கும் படி சொல்லி இருவரும் வேலைகளை உள்ளே சென்று,என் மனைவி எனது முகங்களை பார்த்து இன்று பரவாயில்ல, நாளை முதல் தினம் நீங்க குளிக்கும் போது முகத்தை ஷேவ் பண்ணிடுங்க அப்போதான் உங்கள் முகம் நல்லா இருக்கும் என்று கூ...